சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகும் ஒரு காளை பந்தய வீடியோ தற்போது அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. பந்தய ஓடுதளத்தில  குதிரை மீது பயணித்த ஒரு இளைஞர் திடீரென சமநிலையை இழந்து கீழே விழுகிறார்.

அந்த தருணத்தில், பந்தயத்தில் பங்கேற்று வேகமாக வருவதாகத் தெரியும் இரண்டு காளைகள், அந்த இளைஞன் மீது நேராக நசுக்காமல், சற்றும் காயப்படுத்தாமல் அவர் மீது பாய்ந்து, பின்னர் தங்கள் பாதையைத் தொடரும் காட்சிகள் குறைந்த நொடிகளில் இடம்பெற்றாலும், மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gozzip (@gozzip01)

“>

இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டிருந்தது. அதில், “விலங்குகள் கூட வெற்றியை விட உயிரை மதிக்கின்றன” என கேள்விக்குரிய தலைப்பில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, “மனிதர்கள் இருந்திருந்தால் நசுக்கிவிட்டுத்தான் போவார்கள்” என்ற கருத்து உட்பட, பலரும் உணர்வுபூர்வமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும், “இது மனிதநேயம் அல்ல, உணர்திறன். விலங்குகள் உணர்வுகளை உணருகின்றன, ஆனால் மனிதர்கள் கூட சில நேரம் உணர முடியாமல் செயலில் ஈடுபடுகின்றனர்” எனவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவின் மூலம், மனிதனின் மீது விலங்குகள் காட்டிய கருணை, சமூக வலைதளங்களைச் சூடேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.