டெல்லியின் நிர்மன் விஹாரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில், 29 வயதான மானி பவார் தற்செயலாக கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் தீவிரமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தக் காணொளியில், கண்ணாடிச் சுவர் வழியாக ஒரு மஹிந்திரா தார் கார் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, “பெண் உயிரிழந்தார்”, “பயங்கர காயம் ஏற்பட்டது” என பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், மாணி பவார் நேரடியாக வீடியோ வெளியிட்டு அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“நான் உயிருடன் இருக்கிறேன்… எங்களின் நிலையை நாங்களே தான் உண்மையாக புரிந்துகொள்ள முடியும். யாருக்கும் காயம் இல்லை. பொய் வீடியோக்களை உருவாக்க வேண்டாம்” எனக் கூறி, தவறான தகவல்களை பரப்பாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 लाख की थार… और एक्सीलेटर दबते ही शोरूम की पहली मंज़िल से सीधा सड़क पर
अब इसे लेकर महिला ने एक वीडियो शेयर किया
देखिये वीडियो 👇#DelhiNews #viralvideo #Delhi #THARROXX #viral #Mahindra #WATCH #Accident pic.twitter.com/yvmWhH4wzm— NEWS TODAY (@NEWSTODAY215043) September 11, 2025
“>
சம்பவம் நடந்தது மாலை 5 மணியளவில். காசியாபாத்தைச் சேர்ந்த மானி பவார் தனது கணவர் பிரதீப்புடன் ₹27 லட்சம் மதிப்புள்ள புதிய மஹிந்திரா தார் கார் வாங்கியதுக்குப் பிறகு, பாரம்பரிய வழக்கப்படி பூஜை செய்து, எலுமிச்சை பழத்தின் மீது காரை செலுத்தும் வழிமுறை நடத்தப்பட்டது.
दिल्ली के निर्माण विहार में स्थित महिंद्र शोरूम से महिला ने 27 लाख की थार खरीदी और शोरूम में ही पूजापाठ की, महिला को कार का पहिया नींबू पर चढ़ाना था लेकिन महिला ने ज्यादा एक्सीलेटर दिया और कार बिल्डिंग को तोड़ते हुए 15 फीट नीचे गिर गई#delhi #thar #viralvideo #laxminagar pic.twitter.com/oGgAvDkeZg
— Live Viral Breaking News (@LVBNewsOfficial) September 9, 2025
“>
ஆனால் அப்போது மாணி பவார் தற்செயலாக ஆக்ஸிலரேட்டரை அதிகமாக அழுத்திவிட்டதால், கார் வேகமாக முன்னோக்கி சென்று ஷோரூமின் கண்ணாடிச் சுவரை உடைத்து, 15 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்தது. அதிர்ச்சி தரும் இந்த விபத்தில், காரில் இருந்த மானி பவார், அவரது கணவர் மற்றும் விற்பனையாளர் மூவரும் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வைகளுக்காக பொய் வீடியோக்களைப் பகிர வேண்டாம் எனவும், உண்மையை தவறாக விவரிக்க வேண்டாம் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
