தமிழகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் சில அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தோர், இன்று (செப்டம்பர் 11) ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விதிகளின்படி, எந்தவொரு சங்கமும் தங்கள் உறுப்பினர்களை ஒரே நேரத்தில் தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தக் கூடாது.

எனவே, துறை அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களின் வருகையை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பணிக்கு வந்துள்ளதைக் குறிக்கும் வகையில் வருகைப் பதிவேட்டை தயார் செய்து, காலை 10.30 மணிக்குள் அதனை சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தலைமைச் செயலாளரின் இந்த அறிவுறுத்தல், அரசு நிர்வாகத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகும். அரசு அலுவல்களில் இயல்பான நடைமுறையை உறுதி செய்யவும், தொழில்நுட்ப ரீதியான பதிவுகள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.