உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் உள்ள சுத்மல்பூர் பகுதியில், 11 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவு ஆலையின் முதிய உரிமையாளர் தற்போது தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, ஞாயிற்றுக்கிழமை மாலை (செப்டம்பர் 7), மாவு அரைக்க அருகிலுள்ள மாவு ஆலைக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த வயதான ஆலை உரிமையாளர், சிறுமியை உள்ளே இழுத்து, அவள்மீது ஆபாசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் அலறலால் அருகிலிருந்த இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொது மக்களால் அந்த முதியவர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. வீடியோவில் சிறுமி எப்படி உள்ளே இழுக்கப்படுகிறாள், மேலும் பொதுமக்கள் எவ்வாறு தலையிட்டனர் என்பதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
सहारनपुर के फतेहपुर थाना क्षेत्र में
11 वर्षीय नाबालिग बच्ची से हैवानियत
अधेड़ चक्की मालिक ने बच्ची से की छेड़छाड़। जबरन गोदी में उठा कर आटा चक्की के अंदर ले जाकर दुष्कर्म की कोशिश। हवस का शिकार बनाते समय युवक ने वीडियो बना बच्ची को दरिंदे के चंगुल से छुड़ाया। मुकदमा दर्ज। pic.twitter.com/h7ifNFeYQJ— Shanu Bharty (@riyaz_shanu) September 8, 2025
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், “போக்சோ” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சஹரன்பூர் காவல்துறையின் நிலைய அதிகாரியான வினய் சர்மா, வழக்குப் பதிவு செய்துள்ளதையும், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் தற்போது தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவரை பிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் செப்டம்பர் 9-ஆம் தேதி நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்படவுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
