சமூக ஊடகங்களில் தினமும் பல விதமான வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே வருகின்றன. சில வீடியோக்கள் நேர்த்தியான நகைச்சுவையை முன்வைப்பதோடு, குடும்ப வாழ்க்கையையும் வேடிக்கையான முறையில் பிரதிபலிக்கின்றன. இதையடுத்து தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, “கணவனிடம் இருந்து பணத்தை எடுத்து பிறகு எப்படிச் சமாளிக்கலாம்?” என்ற காமெடியை மையமாகக் கொண்டு உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kanchan Sharma (@kanchansharmaranjan)

ஒரு பெண், தனது கணவனிடம் இருந்து பணம் எடுப்பதை எப்படி சுலபமாக ‘டீல்’ பண்ணலாம் என்பதை தனிச்சுவையுடன் விளக்குகிறார். இந்த நகைச்சுவை வீடியோவில், “என் கணவன் உடனே கவனிக்கிறவர்… நான் எவ்வளவு பணம் எடுத்தாலும் தெரியவந்துரும்!” என ஒருவர் கமெண்ட் செய்ததைக் குறிப்பிட்டு, அதுபோன்ற கணவர்களிடம் பணம் எடுக்கும்போது கணக்கில் சிக்கிக்கொண்டால் எப்படி ‘அடாக்க்’ பண்ணலாம் என்பதையும் அந்தப் பெண் பேசுகிறார்.

“அது என் பணம் தான்னு நினைச்சேன்!” அல்லது, “உங்க பணம் எங்க பணம் இல்லையா?” என டிராமா பண்ணணும் என சொல்லும் அந்தப் பெண், காமெடியுடன் கலக்குகிறார். இந்த வீடியோவை ‘kanchansharmaranjan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. ஏற்கனவே இதை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். “இது எல்லாம் காமெடியா? குற்றமா?” என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ள இந்த வீடியோ, தற்போது வைரல் வீடியோக்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.