உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில், 80 வயது மூதாட்டியை அவரது பேரன் இரக்கமின்றி தாக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் கடந்த மாதம் நடந்ததாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் சனிக்கிழமையன்று வெளியானதுடன், இணையத்தில் பரவி வருகின்றன.
பசோடா கிராமத்தில் உள்ள வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஃபர்மான் என அடையாளம் காணப்பட்ட பேரன், தனது பாட்டியை கட்டிலில் இருந்து கீழே இழுத்து, பின்னர் தன் வீட்டைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தும் வகையில் அடித்து தள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், அந்த மூதாட்டியின் தலைமுடியை இழுத்து, வீட்டின் வாசலின் அருகே இழுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
அந்த பெண், கண்ணீர் மல்கக் கெஞ்சியும், ஃபர்மான் தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தில் உள்ள மற்றொரு பெண் அவரை தடுக்க முயன்றபோதும், அவர் தள்ளப்பட்டார். அதே நேரத்தில், வீட்டிலிருந்த மற்றொரு நபர், கைபேசியுடன் நடந்து செல்வதும் காட்சிகளில் தெளிவாகக் காணப்படுகிறது.
बागपत
➡दादी के साथ पोते का मारपीट करने का वीडियो
➡80 साल की बुजुर्ग की पोता फरमान पिटाई कर रहा
➡घर में सीसीटीवी कैमरे में कैद मारपीट की वीडियो
➡एक सप्ताह पहले महिला की हो चुकी है मौत
➡पुलिस ने आरोपी युवक का शांतिभंग में चालान किया
➡सिंघावली अहीर थाना क्षेत्र के बसौद गांव… pic.twitter.com/o9V5pR24F8— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 8, 2025
சிங்வாலி அஹிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட மூதாட்டி, இந்த வீடியோ வெளியாகும் முன்னரே – சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
இந்த காணொளி இணையத்தில் வைரலான பின்னர், போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஃபர்மான் மீது பாக்பத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற வயோதிக துன்புறுத்தல் சம்பவங்கள், சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், இது பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உ.பி-யின் ஷாஜஹான்பூர் பகுதியில் நடந்த சம்பவத்தில், 75 வயது மூதாட்டி ஒருவர் தனது 13 வயது மகளை அடிக்கவிடாமல் தடுத்தபோது, அவரது மகனால் தடியால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நேரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
