இணையதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வீட்டில் உள்ள டேபிளில் ஜாரா என்ற நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கை ஒன்று இருந்தது. இதனை பார்த்த பெண் அம்மா தனக்காக ஆடை அல்லது ஷூ வாங்கி வட்டு வந்திருப்பார் என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக டேபிளின் அருகே சென்று அந்தப் பையை திறக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்தப் பையில் கொத்தமல்லி மட்டுமே இருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sayali Chandane (@sayali_chandane)

இந்த வீடியோக்கு இணைப்பாக, “Just Indian Mom Things!” என்ற வரி கூட சேர்க்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக வலைதளங்களில் இதற்கு பலவிதமான கமெண்டுகளைப் பதிவிட்டுள்ளனர். “Zara-வில் கொத்தமல்லி வாங்குறதுக்கு மட்டும் தானா அம்மா?” என ஒருவர், “ஸ்டைலிஷா வெஜிடபிள் ஷாப்பிங் பண்ணுறாங்க!” என மற்றொருவர். சர்வதேச பிராண்டைப் பயன்படுத்தியும் நம் பாரம்பரியத்தை விட்டு விடாத நம்ம அம்மாக்கள் – அந்த உண்மைதான் இந்த வீடியோவில் அனைவரையும் கவர்ந்தது.