கல்லூரி திருவிழாக்கள் என்றாலே மகிழ்ச்சி, இசை, மற்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளின் கலவைதான். இப்படி ஒரு கல்லூரி திருவிழாவில், புனேவின் ஃபெர்குசன் கல்லூரி மாணவர் ரிதேஷ் என்ற இளைஞர், தனது மறைந்திருந்த திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் riteshhudawant என்ற ஐடி மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோ, 5.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 49,000-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உற்சாகமான நடனம், கல்லூரி மேடையை கான்சர்ட் மேடை போல மாற்றியது என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritesh Udawant (@riteshhudawant)

வீடியோவில், வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில், பின்னணியில் இசை ஒலிக்க, ரிதேஷ் தனது நடனத்தை தொடங்குகிறார். ஆரம்பத்தில் எளிமையான ஸ்டெப்ஸ்களுடன் தொடங்கியவர், பாடல் முன்னேற முன்னேற, ஹிப்-ஹாப் முதல் பாலிவுட் வரை பலவிதமான நடன அசைவுகளால் அசத்துகிறார்.

அவரது தன்னம்பிக்கையும், ஸ்டைலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த, முதல் சில வினாடிகளிலேயே சீட்டியும், கைதட்டல்களும் எழுந்தன. “பையா, கல்லூரி ஃபெஸ்ட்டை கன்சர்ட் ஆக்கிட்ட!” என்று ஒருவர் கமெண்ட் செய்ய, “இந்தியாஸ் காட் டேலண்ட்டுக்கு போனா நேரா ஃபைனல் தான்!” என்று மற்றொருவர் பாராட்டியுள்ளார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்தான் கல்லூரி வாழ்க்கையை மறக்க முடியாததாக மாற்றுவதாக பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.