சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
10 உறுப்புநாடுகளை கொண்ட இந்த மாநாட்டில், உலக அரசியல் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடியும், அதிபர் புதினும் ஒன்றாக நடந்து வரும் வீடியோவை “Video of the Day” என சுட்டிக்காட்டி, ரஷ்ய வெளியுறவுத்துறை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.
🇷🇺🇮🇳🇨🇳 President of Russia Vladimir Putin, Prime Minister of India Narendra Modi, and President of China Xi Jinping just before the start of the #SCO Summit
📹 © https://t.co/1iwVtSG6SN pic.twitter.com/o1rqQWYhT7
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) September 1, 2025
“>
இந்த காணொளியில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் மிக நெருக்கமாக உரையாடிக்கொண்டு, தோழமையான முகபாவனைகளுடன் நடந்து வருவது காணப்படுகிறது. இதனால் உலக அரங்கில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சமநிலைகளை இது பிரதிபலிக்கிறது என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அதிக வரிகள் விதித்து வரும் நிலையில், இந்த மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து தோழமை காட்டுவது, அமெரிக்காவின் உலக அதிகார பாங்குக்கு நேரடியான சவாலாக பார்க்கப்படுகிறது. SCO மாநாட்டின் முக்கிய அம்சமாக மாறிய இந்த வீடியோ, சர்வதேச அளவில் முக்கியமான அரசியல் செய்தியாக பரவி வருகிறது.
