கிழக்கு ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் பதிவான நிலையில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி, சபதேர மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு கிராமங்களில் உள்ள வீடுகள் நிலநடுக்கத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டரசு அறிவித்துள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.