சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த சந்திப்பின் போது மூவரும் இடையே நட்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அரசியல் சமநிலைகளில் மாற்றங்களை உருவாக்கும் வகையில் இந்த முக்கோண பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின்  அதிபர் ட்ரம்ப் விதித்த வரி நிலைப்பாடுகள் காரணமாக, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதாக சில பத்திரிகைகள் கருத்து வெளியிட்டுள்ளன.

“>

 

இதே மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ்  ஷரீஃப் பங்கேற்றிருந்தாலும், முக்கிய தலைவர்களிடமிருந்து அவர் புறக்கணிக்கப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்றன.

பிரதமர் மோடி மற்றும் புதின் இருவரும் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டு நடந்து செல்லும் போது, ஷரீஃப் ஒருவர் தனிமையில் கையில் கைகள் பின்னி பிணைந்தபடி  கவலையுடன் நின்ற காட்சி பார்வையாளர்களை  வேதனையில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு பாகிஸ்தானின் புறக்கணிக்கபடும் அரசியல் நிலையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.