வன உலகத்தின் திகில் நிறைந்த தருணங்களை பதிவு செய்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான காட்சியில், ஒரு கருப்பு மாம்பா, ஒரு கழுகு மற்றும் ஒரு பெண் சிங்கம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதை காணலாம்.
காட்சியில், பாம்பு ஒருபுறம் கழுகை பிணைப்பதில் ஈடுபட, மறுபுறம் அந்த இரையை பிடிக்க பெண் சிங்கம் மெதுவாக நெருங்குகிறது. இந்த மூவருக்கும் இடையேயான சண்டை நொடிக்கணங்களில் திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் திகில் கொடுக்கும்.
சண்டையின் முடிவில், மாம்பாவால் தாக்கப்பட்ட பெண் சிங்கம் அதற்கு பதிலடி கொடுக்கிறது. சண்டையால் சோர்ந்த பாம்பு கழுகை விட்டுவிட்டு விலக, கழுகு உயிர் தப்பி வானில் பறக்கிறது. அதே சமயம், பெண் சிங்கம் கழுகை பிடிக்க முயற்சி செய்தாலும், அதன் துணிச்சலான வேகத்தில் காற்றில் பறந்து தப்பிக்கிறது.
Epic Battle Between Lions, a Black Mamba, and an Eagle! pic.twitter.com/OIf8zjOqng
— Sandeep Neel (@SanUvacha) July 23, 2025
“>
இதில் யாருக்கும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்பது தான் கதையின் கிளைமாக்ஸ். ஆனால் இந்த வீடியோ காட்டும் உண்மை – காட்டில் எந்தப் பாதிப்பும் நிரந்தரமல்ல; நொடிக்குள் நிலைமை புரட்டிப் போகலாம் என்பதே! இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம், ஷார்ட்ஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. “இந்த சண்டையில் வெற்றி பெற்றது கழுகு இல்ல, அதிர்ஷ்டம்தான்!” என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
