தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை ஆண்டிவேல் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண்டிவேலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது ஆண்டிவேல் தனது மனைவி உயிரிழந்த பிறகு தங்கை உறவுமுறை கொண்ட ஆனந்த ராணி என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் கிராம மக்கள் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனை அடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் ஆண்டிவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆனந்த ராணிக்கும் பழ வியாபாரியான பாலமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டி வேல் பாலமுருகனுடன் ஆனந்தராணி குடும்பம் நடத்துவது அறிந்து தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன் ஆண்டி வேலை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.