உலகம் முழுவதும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அரசாங்கங்கள் கூறினாலும், உண்மை நிலைமையை வெளிப்படுத்தும் ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் @ReshmaM15238489 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 16 வினாடிகள் கொண்ட காணொளியில், சாப்பிட்டு முடித்த பிறகு தூக்கி எறியப்பட்ட தட்டுகளில் மீதமுள்ள உணவை எடுத்துச் சாப்பிடும் ஒரு சிறுமியின் வேதனையை காணலாம். உணவுக்காக அலைந்து திரியும் இந்தக் குழந்தையின் நிலை சமூகத்தை பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த காணொளியில், சாலையோரத்தில் நிறைய தட்டுகள் தூக்கி எறியப்பட்டுள்ளன. அவற்றில் சில தட்டுகளில் சற்றளவு உணவு மீதமிருக்க, அதனைப் பார்த்த அந்த சிறுமி தயக்கமின்றி அதிலிருந்து உணவை எடுத்து சாப்பிடுகிறாள்.
இந்த செயலில் அவளுக்கு ஒரு தவறும் இல்லை; பசி தான் அவளை இந்த நிலைக்கு அழைத்துச் சென்றது என்பது காணொளியின் உணர்வுப் பின்னணி. அவளுக்கு அருகில் நிற்கும் யாரும் உணவைக் கொடுக்க முன்வரவில்லை என்பது மனதை நொறுக்கும் ஒரு உண்மை. மக்கள் அந்தக் காட்சியை வீடியோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினார்கள்.
खाना उन्ही की थालियों से कूड़े तक जाता है,
जिन्हें पता नहीं होता भूख क्या होती है.. pic.twitter.com/crwy9NrMAo
— Reshma Memon (@ReshmaM15238489) August 27, 2025
“>
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு பலரும் சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். ‘பசி என்றால் என்னவென்று புரியாமல் உணவை வீணாக்கும் பலர் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்’, ‘உணவு மீதமிருந்தால் குப்பையில் போடாதீர்கள், யாராவது பசியுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்’ என பலரும் எழுதியுள்ளனர்.
இந்த வீடியோ, உணவின் மதிப்பு குறித்து அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. உணவுக்கு மதிப்பு கொடுத்து, அந்த உணவை உண்மையில் தேவைப்படும் நபர்களிடம் பகிர்வது தான் நம் சமூகத்தின் ஒழுக்கமும், மனிதநேயமும் என்பதைக் காட்டும் உணர்ச்சிபூர்வமான காணொளி இது.
