இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், 10,000 வோல்ட் மின்சாரத்தைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டை சிலர் விளையாடுகின்றனர். அதாவது இந்த விளையாட்டில், பங்கேற்பவர்கள் மின்சாரம் பாயும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இது மிகவும் அபாயகரமான செயல் என்பதால், பார்ப்பவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விளையாட்டில் பலர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு, சிரமப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்து, உருண்டு எப்படியோ தப்பிக்கின்றனர். இந்த ஆபத்தான விளையாட்டு பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இப்படி ஒரு அபாயகரமான விளையாட்டை நடத்தியது தவறு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
