காசியாபாத் அருகே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்திய நிலையில் சாலையின் நடுவே படுத்திருந்த ஒருவர் மீது, MG Astor கார் ஓட்டுநர் நேரடியாக வேகமாக கார் ஓட்டிச் சென்றுள்ளார். வீடியோவில், அந்த நபர் சாலையின் நடுவே சுயநினைவின்றி கிடப்பதை ஒரு சில வாகனங்கள் கவனித்து நின்றாலும், ஒரு கார் மட்டும் யோசிக்காமலும், கவனிக்காமலும் நேரடியாக அவர் மீது மோதிச் செல்கிறது. இந்த சம்பவத்தின் CCTV வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோவில், காரை ஓட்டிய நபர் எந்த தயக்கமும் இல்லாமல், அந்த குடிகாரர் மீது காரை ஏற்றுகிறார்.  அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்கோ அல்லது உதவுவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை . இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி மற்றும் ஆத்திரம் ஆகிய இரண்டிலும் மூழ்கியுள்ளனர்.

“>

இந்த வீடியோ ட்விட்டரில் @Deadlykalesh என்ற பயனர் பகிர்ந்துள்ளார். வெறும் 8 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளி, நொடிகளில் ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவின் பின்னணியில், பலர் அதிர்ச்சி மற்றும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், சமூகத்தில் அதிகப்படியான மது அருந்தும் பழக்கம், கவனக்குறைவு, மற்றும் பொது பொறுப்பின்மை ஆகியவை எவ்வளவு பேரழிவை உருவாக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது