மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் குஷ்பூ. இவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து கணவர் என்னை துன்புறுத்தி இரவு நேரம் குடிபோதையில் கண்மூடித்தனமாக அடிப்பார்.

சமையலறைக்கு இழுத்துச் சென்று கை, கால்களை கட்டி போட்டு சூடான கத்தியால் மார்பு கைகள் மற்றும் கால்களில் சூடு வைத்தார். நான் வலியில் அலறி துடித்தேன். அப்போது சூடான கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார். எனது பெற்றோர்தான் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள்.

ஆனால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை எனக் கூறியே என்னைய அடித்து துன்புறுத்தினார். அதிகாலை 4:30 மணிக்கு அவர்களிடமிருந்து தப்பித்து வந்து வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் செல்போன் மூலம் எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குஷ்பூ புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிகமான வரதட்சணை கேட்டு குஷ்பூவை அடித்து சித்திரவதை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது