திரையுலகில் பெரும் பெயர் பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. அவரது கணவர் மற்றும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், சிலர் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்றதாகவும், அந்த சான்றிதழின் அடிப்படையில் மூன்று பேர் ஸ்ரீதேவியின் சொத்துகளில் உரிமை கோருவதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தவறான முறையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என போனிகபூர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மோசடி புகாருக்கு தொடர்புடைய அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, அவருடைய மனுவிற்கு தீர்வு காணவேண்டும் என நீதிபதி கூறினார்.
அதன்பேரில், தாம்பரம் தாசில்தாரிடம் இருந்து வரும் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இந்த வழக்கில், 4 வாரங்களில் முடிவெடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை திரையுலகமும், ஸ்ரீதேவியின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
