தமிழக அரசியலில், நடிகர் விஜய் தலைமையில் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம், வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், விஜய் போட்டியிடும் தொகுதியை குறிவைத்து திமுகவின் ஒருசில திட்டங்கள் களத்தில் வருகின்றன. குறிப்பாக, திமுக உதயநிதி தலைமையிலான திட்டத்தில், விஜய்க்கு நேரடி போட்டியாக நடிகர் விஷாலை எதிரணியில் களமிறக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. உதய்நிதியின் நெருங்கிய நண்பரான விஷால், இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “நான் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டேன். எனவே தற்போது வேறு தீர்மானம் எதுவும் இல்லை” என விஷால் தெரிவித்துள்ளார். இது விஜய்க்கு நேரடி எதிரியாக அவர் வர வாய்ப்பு உள்ளதா? . இருப்பினும், அரசியல் என்பது கடைசி நிமிட திருப்பங்களால் நிரம்பியுள்ளதால், இந்த ‘ஸ்கெட்ச்’ இறுதிவரை எப்படி மாறும் எனும் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் நிலையில் உள்ளது.
