“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், “அதிமுக என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயகக் கட்சி. ஆனால் திமுக, தற்போது முழுமையாக குடும்பக் கட்சியாகவே செயல்படுகிறது.

திமுகவில் உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. அதிமுக பெயரால், அந்தக் கட்சிக்கு சென்றவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி, இலாகா என விருப்பமான பதவிகள் வழங்கப்படுகின்றன” என குற்றம்சாட்டினார்.

மேலும், “செந்தில் பாலாஜி, ரகுபதி உள்ளிட்ட 8 பேர் அதிமுகவில் இருந்தவர்களே  எட்டப்பனாக மாறி திமுகவுக்கு  போயுள்ளனர். அவர்கள் துரோகிகள். அதிமுக இருந்ததால்தான் அவர்களுக்கு மக்கள் இடத்தில் அடையாளம் கிடைத்தது. இப்போது அவர்கள் திமுகவில் சென்று நச்சு வார்த்தைகள் பேசுகிறார்கள்.

ஆனால் அதிமுக தொண்டர்களை கொண்ட ஒரு ஒழுங்கு முடிவான இயக்கம். துரோகிகளை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை” என்று எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார்.