தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தும் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.

அதில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக்கொள்ளலாம். சாதி மறுப்பு திருமணத்திற்கு அரசு தளம் அமைக்காத நிலையில், நாங்கள் காதலர்களுக்காக நம் அலுவலகங்களை திறந்து வைக்க தயாராக இருக்கிறோம்” என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இதற்கு பதிலளித்தார். அதில், “பாஜகவினருக்கு ஆணவக் கொலைகள் மீது கடும் கோபம் உள்ளது. கடுமையான சட்டங்களை கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை  எனத் தெரிவித்தார்.