பிரபல நடிகரான பார்த்திபன் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மனைவி என்ற அந்தஸ்தை சீதாவுக்கு மட்டும்தான் கொடுத்தேன். வேறு யாருக்கும் இதுவரை நான் கொடுக்கவில்லை. சமீபத்தில் என் மனைவியோட அம்மா இறந்து விட்டார்கள்.
அவர் இறந்த பிறகு அபி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். காலை அங்கு சென்று இரவு வரை அனைத்து ஏற்பாடுகளையும் நான்தான் கவனித்துக் கொண்டேன். பின்னர் எனது மனைவி எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் ஏ டூ இசட் நீங்கதான் பார்த்தீங்க ரொம்ப நன்றி என அனுப்பியிருந்தாங்க. அந்த இடத்தில் நான் என்னவாக இருக்க வேண்டுமோ அதுவாகத்தான் இருந்தேன். என் மகளின் திருமணமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கணும்.
எங்க இருவருக்கும் மன வருத்தம் தவிர அதுக்கு பின்னாடி இருந்த மரியாதை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. வேறு எந்த மாற்றமும் கிடையாது. மனைவி அந்தஸ்து சீதாவுக்கு மட்டும்தான். வேறு யாருக்கும் அந்த இடத்தை கொடுக்க மாட்டேன் என பார்த்திபன் பேசியுள்ளார். அவரது பேச்சு உண்மையான காதல் அன்பையும், மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நிரூபிக்கிறது.
