இல்லத்தரசிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் கெட்டுப்போவது பெரிய கவலையாக இருக்கும். இதற்கு ஒரு சமூக வலைதள காணொளியில் எளிமையான டிப்ஸ்கள் பகிரப்பட்டுள்ளது.
- கீரை வகைகளை தண்ணீரில் சுத்தம் செய்து துணி ஒன்றில் வைத்து சுத்தி அதனை பாக்ஸில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) சேமிக்க வேண்டும்
- வாழைப்பழம் நுனியில் ஒரு கேரி பையை சுற்றி வைத்தால் அது பழத்தை புதியதாக வைத்திருக்க உதவும்.
- மாவு மற்றும் அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க, பிரியாணி இலையை (பிரிஞ்சி இலை) அதனுடன் சேர்த்து வைக்கலாம்.
- இஞ்சி கெட்டுப்போகாமல் இருக்க, ஒரு டப்பாவில் தண்ணீர் நிரப்பி, அதில் இஞ்சியை போட்டு பாதுகாக்கலாம்.
- அதேபோல், பல்லாரி (வெங்காயம்) அழுகாமல் இருக்க, அதை ஒரு பேண்டி ஹோஸில் போட்டு கட்டி வைக்கலாம்.
- பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க, ஒரு காகிதப் பையில் சிறு ஓட்டைகள் போட்டு, அதில் பூண்டை சேமித்து வைத்தால் பல நாட்கள் புதியதாக இருக்கும்.
- தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க, அதை தலைகீழாக ஒரு டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) சேமிக்க வேண்டும்.
இந்த டிப்ஸ்கள் அடங்கிய காணொளி இல்லத்தரசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.
