இன்றைய நவீன உலகில் யாரைக் கேட்டாலும் “Stress அதிகம்” என்பதே பொதுவான பதிலாக இருக்கிறது. இதை குறைக்கும் வகையில், வாரத்திற்கு ஒருநாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருந்து ஓய்வெடுப்பது நல்லது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருநாள் முழுவதும் எந்தப் பணியுமின்றி சோம்பேறியாக இருந்தால், மனஅழுத்தம் குறையுவதோடு, இரத்த அழுத்தம் சீராகும், மனநலம் மேம்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இது கவனத்தை கூர்மையாக்கி, வேலை திறனை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.