இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் வருகிறார். அதே சமயம், மற்றொரு நபர் ஒரு சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வருகிறார். இந்நிலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம், குறுக்கே வந்த வாகனத்தின் மீது மோத, ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து காணொளியாகப் பதிவாகி, பார்க்கும் அனைவரையும் பதற வைத்துள்ளது.
இந்த விபத்தில், அதிக வேகத்தில் வந்த நபருக்கும், குறுக்கே வந்த நபருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறுக்கே வந்த நபருடன் இருந்த சிறுவனின் முகத்தில் மிக மோசமான காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அழுதுகொண்டிருந்தான். இந்த காணொளி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது.
View this post on Instagram
