டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் இரு பெண்கள் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. ஓர் இருக்கையைப் பற்றிய சர்ச்சையில்தான் இந்த சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை இருக்கையில் இருந்து தள்ளி, பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்திழுக்க, மற்றொரு பெண் தலையிட்டு அவர்களை பிரிக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பயணிகள் சிலர் இறங்கும் நேரத்தில் நடந்த இந்த சண்டை, மெட்ரோ ரயிலுக்குள் பயண பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

“>

 

சம்பவத்தின் நேரம் மற்றும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இந்த வீடியோ டெல்லி மெட்ரோ ரயிலின் உள்ளே எடுத்ததுதான் என வலைதளங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

“மற்றொரு நாள்… டெல்லி மெட்ரோவில் இன்னொரு சண்டை!” எனக் கூறி நெட்டிசன்கள் பதவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ டெல்லி மக்களின் பொது போக்குவரத்து நாகரிகம் மீதான விமர்சனத்தையும் தூண்டியுள்ளது.