ரயில் நிலையங்களில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட பாதை  எதற்காக என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அந்த பாதையானது பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிகாட்டி ஆகும். அவ்வகையில் இந்தப் பாதை, கண் பார்வையற்றவர்கள் தனியாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க உதவுகிறது. அவர்கள் இந்த மஞ்சள் பாதையைத் தொட்டு, அதன் மேடு பள்ளங்களை உணர்ந்து, சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நடக்க முடியும். ஆனால், நம் நாட்டில் இந்தப் பாதையைப் பலரும் பயன்படுத்துவதால், பார்வையற்றவர்களுக்கு இது பயன்படாமல் போகிறது.

ஜப்பானில் இதே மஞ்சள் பாதை மிகவும் ஒழுங்காகப் பயன்படுத்தப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில், கண் பார்வையற்ற ஒருவர் முழு நம்பிக்கையுடன் அந்தப் மஞ்சள் பாதையில் வேகமாக நடந்தது செல்வார். இதற்குக் காரணம், அந்தப் பாதையில் வேறு யாரும் நடக்கமாட்டார்கள். இதனால், பார்வையற்றவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல்  தைரியமாக பயணிக்க முடிகிறது.

நம் நாட்டிலும் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இதே நம்பிக்கையை பார்வையற்றவர்களுக்கு அளிக்க முடியும் என்பதற்கு சான்று தான் இந்த காணொளி.