அதிமுக கட்சியில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக பயணித்து சாதாரண தொண்டனாக இருந்து அமைச்சராக உயர்ந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் கடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி காரணமாக தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே அதிமுகவில் 4 ராஜினாமா செய்த நிலையில் சி விஜயபாஸ்கரையும் சேர்ந்து ஐந்து பேராக அதிகரித்தது. ஏற்கனவே தமிழகத்தில் திருச்சி கிழக்கு தொகுதியோடு 5 சட்டசபை தொகுதிகள் காலியான நிலையில் தற்போது ஆறு தொகுதிகளாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவை செயலகம் விராலிமலை தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
