விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காகவும், மன அமைதிக்காகவும் மக்கள் அருவிகள் மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால், அமைதியாகக் காணப்படும் இத்தகைய இயற்கை இடங்கள் சில நேரங்களில் எதிர்பாராத ஆபத்துக்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அழகிய அருவியில் குளித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. சுற்றியுள்ள சூழல் மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததால் அங்குள்ள ஒரு பாறையின் மீது ஏறி அந்தப் பெண் குளித்து மகிழ்ந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென அந்தப் பெண்ணுக்கு அருகில் ஏற்பட்ட ஒரு ஆபத்து அவரை அலறியடிக்க வைத்துள்ளது.
An episode that occurred in an area of a waterfall has attracted attention by showing how seemingly calm situations can quickly turn into moments of danger. During a moment of leisure, a visitor was surprised to encounter a snake close to the site where he was bathing.
Upon… pic.twitter.com/3IgMRoYmSF
— Barkley (@Blnd_well) June 16, 2026
அந்தப் பெண் பாறையின் மீது நின்றுகொண்டிருந்த போது, தற்செயலாகத் தனது காலடிக்குக் கீழே பார்த்துள்ளார். அங்கே ஒரு ராட்சத பாம்பு இருப்பதைக் கண்டு அவர் மரண பயத்தில் உறைந்துபோய், பயங்கரமாகக் கூச்சலிட்டுள்ளார். பாம்பிடமிருந்து தப்பிக்க நினைத்து அவர் பதற்றமடைந்ததில், பாறையின் மீது இருந்த அவரது உடல் சமநிலை தவறியது. இதனால், அவர் பல அடி உயரமுள்ள அந்தப் பாறையிலிருந்து நேராகக் கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக, அந்தப் பெண் பாறைகளுக்கு இடையே இருந்த ஆழமான தண்ணீருக்குள் விழுந்ததால், அவருக்குப் பெரிய அளவில் ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பினார். ஒருவேளை அவர் அருகில் இருந்த கரடுமுரடான பாறைகளின் மீது விழுந்திருந்தால், அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, காடுகளில் அல்லது நீர்நிலைகளில் பாம்புகளைக் காணும்போது பதற்றமடைந்து ஓடாமல், அமைதியாக இருந்து பாதுகாப்பாக தூரத்தில் இருப்பதே நல்லது என்று அறிவுறுத்துகின்றனர்.
