இன்றைய காலகட்டத்தில் “மனிதநேயம் இருந்தா போதும்” என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், மழையால் பாதிக்கப்பட்ட சாலையில் மின்சாரம் தாக்கி தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் உயிரை, தனது உயிரைச் துச்சமென  நினைத்து காப்பாற்றிய ஒரு மனிதரின்  செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. குழந்தை தரையில் விழுந்து துடித்தபோது, சுற்றியிருந்தவர்கள் மின்சாரம் பரவியிருந்ததால் அருகே செல்லத் தயங்கினர்.

ஆனால், அந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு நபர், ஆபத்தை உணர்ந்தும் துணிச்சலுடன்  சென்று, ஒரு நீண்ட குச்சியின்  உதவியால் குழந்தையை உயிருடன் மீட்டார். இந்த காட்சி ஒட்டுமொத்த சமூகத்தை அதிர்ச்சியிலும், பெருமையிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதுடன், true.line__ என்ற இன்ஸ்டா பக்கத்தில் பலரும் இதைப் பார்த்து கண்ணீர் கலந்த கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். “இந்த மனிதனை என் இதயத்துடன் வணங்குகிறேன்”, “மனிதநேயம் சாதி மதத்தை தாண்டி நிற்கிறது” போன்ற கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by true line (@true.line__)

“>

மேலும், “ஒரு தவறான அடியில் நபருக்கே உயிர் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்” எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இது போன்ற தன்னலமற்ற செயல், தற்போது கடும் இழப்புகளுடன் வாழும் இந்த சமூகத்திற்கு ஒரு ஒளியாக  பார்க்கப்படுகிறது.

மழைக்காலங்களில் மின்சாரம் சாலையில் பரவுவது, மின்கம்பிகள் விழுவது போன்ற சம்பவங்கள் இடையிடையே நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில் நம் வாழ்வை விபத்துக்குள்ளாக்கிக் கொள்ளும் ஆபத்தையும் உணர்ந்து கொண்டு, ஒருவரின் உயிரை மீட்ட இந்த மனிதரின் செயலே உண்மையான ஹீரோயிசம். இக்காணொளி ஒரு செய்தியாக மட்டுமல்ல, மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் அன்பும், ஈடுபாடும், தன்னலமற்ற சிந்தனையும் இன்னும் உயிருடன் இருப்பதை நிரூபிக்கிறது. இது போல மனிதநேயம் பரவட்டும்!