தமிழ்நாட்டில் கிராமங்களில் வேலை பார்த்து வரும் தூய்மை காவலர்கள் விடுமுறை கேட்டு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தற்போது அவர்களுக்கு தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி கிராமங்களில் வேலை பார்க்கும் தூய்மை காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறைக்கும் சுற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள தூய்மை காவலர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.