இணைப்புகளும் விலகல்களும் நடைபெற்று வரும் அரசியல் சூழலில், தற்போது ஒரு முக்கிய முன்னாள் திமுக நிர்வாகி பாஜகவில் இணைய உள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், இன்று (ஆகஸ்ட் 22) நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு, திமுக ஆட்சி வருகைக்கு பிறகு, அதே ஆண்டில் ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் பாஜகவில் இணைவது, தமிழ்நாடு அரசியலில் ஒரு முக்கிய முன்னிலை மாற்றமாகக் கருதப்படுகிறது.
