மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் நிலையிலேயே உயிரிழக்கும் போது வழங்கப்படும் EPF கருணைத் தொகை ரூ.8.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுவதாக EPFO அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த உயர்வு 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் 5% வீதம் இந்த தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதன்படி 2026 ஏப்ரல் 1 முதல் ஆண்டுதோறும் இதற்கான மதிப்பெண்ணின் அடிப்படையில் அதிகரிப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, பணியில் உயிரிழந்த ஊழியர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.