சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரை அதிர்ச்சிக்கும் அதே நேரத்தில் நகைச்சுவையிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுவன் நேரடியாகக் வெஸ்டர்ன் டாய்லெட்டிற்குள் (Western toilet) இறங்கி அமர்கிறார்.
பின்னர், தானாகவே ஃப்ளஷ் அழுத்துகிறார். அடுத்த சில விநாடிகளில், அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டிலிருந்து ஒரு பெரிய தண்ணீர் வெள்ளம் வெடிப்பது போல் பரவுகிறது, அதில் அந்தக் குழந்தையும் ஊற்றுக்குள் இழுத்து செல்வது போல காட்டப்படுகிறது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ உண்மையிலேயே மிகவும் பதற்றத்தைக் கிளப்பும் வகையில் உள்ளது. குழந்தை ஃப்ளஷ் செய்ததும், வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருந்து அலைபாயும் நீர் காற்றில் பறந்து வரும் போல வீசுகிறது. தண்ணீர் வெள்ளத்தில் அந்தக் குழந்தை முழுவதுமாக இழுத்துச் செல்லப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தது, பலரும் வீடியோவைப் பார்த்ததும் உடல் நடுங்கியது எனக் கூறுகின்றனர். இருப்பினும், பலரும் இதை உண்மையா எனக் கேள்வி எழுப்பினர்.
जो जितना फायदेमंद होता है…
उतना नुकसानदायक भी हो सकता है..नोट:- यह विडियो AI भी हो सकता है…! pic.twitter.com/Z27c0Ac8kZ
— Dilip Damor jay’s (@DilipDamorDamo1) August 16, 2025
“>
இதற்கிடையே, இந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதென்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) உதவியுடன் யாரும் எந்தவிதமான காட்சியையும் உருவாக்க முடிகிறது.
இந்த வீடியோவிலும் குழந்தையின் செயல், தண்ணீர் வெள்ளம், தூக்கி வீசப்படும் காட்சிகள் அனைத்தும் பனிப்பொழிவு போன்ற கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான், இது உண்மையில்லை என்றாலும், கண்ணை மயக்கும் வகையில் மக்கள் விரைவில் பகிர்ந்து, இது வைரலாக மாறியுள்ளது.
