அமெரிக்காவின் உட்டா மாநில ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்புடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தள்ளுவண்டியில் இருந்த குழந்தையை “இது என் குழந்தை, எனக்குக் கொடு” என்று கூறி பிடிக்க முயன்றவர் 56 வயதான பெஞ்சமின் டில்மேன் என்பவரின் செயலால்  குழந்தையின் தாய் பீதியடைந்து உதவி கேட்டு கத்தியதும், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தலையிட்டு  காப்பாற்றினர்.

குற்றவாளி குழந்தையின் சீட் பெல்ட்டை கழற்ற முயன்றபோதும், பொதுமக்கள் தடுக்க, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சம்பவத்தின் முழுக் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் ஜூலை 29 அன்று நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையை கடத்த முயன்றது மட்டுமல்லாமல், அதன் தாயைத் துன்புறுத்திய குற்றச்சாட்டும் டில்மேனுக்கு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற அவர், விரைவில் உட்டா போக்குவரத்து ஆணைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

“>

 

வீடற்ற நபராக இருந்த டில்மேனுக்கு ஒரு தங்குமிடம் மட்டுமே முகவரியாக இருந்ததால், ஜாமீனில் விடுவிக்க கூடாது என போலீசார் வலியுறுத்தினர். “அவரது செயல் வெட்கக்கேடானதுடன், சமூகத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது டில்மேன் சால்ட் லேக் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.