சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மலை உச்சியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த ஜோடி, திடீரென மாறிய சூழலில் மறக்க முடியாத தருணத்தை சந்தித்தனர். இளைஞர் திடீரென மண்டியிட்டு காதலியை நிச்சயதார்த்தம் செய்ய முன்மொழிந்தார்.
ஆச்சரியப்பட்ட காதலி “ஆம்” என்று சம்மதித்தவுடன், அவர்களின் பின்னால் இருந்த எரிமலை வெடித்து, தீப்பொறி மற்றும் புகை வானத்தில் பறந்தது. காதலுக்கும் இயற்கைக்கும் இடையிலான இந்த அற்புத தருணம், காட்சி பார்த்த அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
An unforgettable moment.
A volcano erupted just as a man was proposing to his girlfriend. pic.twitter.com/HxDWJRZaPK
— The Figen (@TheFigen_) August 18, 2025
“>
இந்த வீடியோ வைரலாகி, ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது. “இயற்கையே இவர்களின் காதலை கொண்டாடியது போலிருக்கிறது” என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். “அந்த வெடிப்பின் நேரம் பாகுபலி காட்சியைப் போல் பிரமாண்டமாக இருந்தது” என மற்றொருவர் கிண்டல் செய்தார்.
An unforgettable moment.
A volcano erupted just as a man was proposing to his girlfriend. pic.twitter.com/HxDWJRZaPK
— The Figen (@TheFigen_) August 18, 2025
“>
காதல் முன்மொழிவின் போது இயற்கை தனது பங்கைச் சேர்த்துக்கொண்ட இந்த நிகழ்வு, நெட்டிசன்களுக்கு ரொமான்ஸ் மற்றும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் பரிமாறி வருகிறது.
