செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் கணேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு சொந்தமான நான்கு வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 5 வருடமாக மணிகண்டன் அங்கு வாடகைக்கு இருப்பதால் கணேசனுடன் நல்ல நட்பு இருந்தது. இதனால் கணேசனின் 23 வயது மகளை மணிகண்டன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நேற்று காலை அந்த இளம்பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

இதனை கவனித்த மணிகண்டன் யாருக்கும் தெரியாமல் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜன்னல் கண்ணாடி வழியே யாரோ தன்னை வீடியோ எடுப்பதை அறிந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு பெண் வீட்டார் ஓடிவந்த போது மணிகண்டன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் மணிகண்டன் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.