ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்ஸ்ராம், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இவர், அப்பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்தார்.

ஆனால், இவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டை திறந்து பார்த்தபோது, ஹான்ஸ்ராமின் உடல் டிரம்முக்குள் சிதைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஹான்ஸ்ராமின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. உடல் அழுகாமல் இருக்க, டிரம்மில் உப்பு நிரப்பப்பட்டிருந்தது. உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஹான்ஸ்ராமின் மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் வீட்டு உரிமையாளரின் மகன் மாயமாகியுள்ளனர். இதனால், அவர்கள் மீது சந்தேகத்தை திருப்பியுள்ள காவல்துறையினர், மாயமானவர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை கண்டுபிடித்தால் மட்டுமே இந்த கொடூர கொலைக்கு பின்னால் உள்ள மர்மம் வெளிச்சத்துக்கு வரும் என காவல்துறை நம்புகிறது