தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ-வின் பலம் அதிகமாக இருப்பதால், சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே, பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு பிறகு, பா.ஜ.க.வைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் எச்.ராஜா மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.