தலைநகரான டில்லியில் ஒரு சிறுவனின் குறும்புத்தனமான லிஃப்ட் பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் லிஃப்ட் அருகே நின்று, கதவுகள் மூடப்படும்போது பொத்தானை அழுத்தி மீண்டும் திறக்கச் செய்கிறான்.
பின்னர், அருகில் ஒளிந்து, உள்ளே இருப்பவர்களின் எதிர்வினையை ரசிக்கிறான். முதலில், ஒருவர் வெளியே வந்து சிறுவனைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே செல்கிறார். ஆனால், சிறுவனின் குறும்பு அங்கு நிற்கவில்லை; மீண்டும் பொத்தானை அழுத்தி, வேறொரு நபரை வெளியே வரவைத்து, சிரித்தபடி ஓடிவிடுகிறான்.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 17, 2025
இந்த வைரல் வீடியோவின் உச்சகட்டமாக, சிறுவன் மீண்டும் பொத்தானை அழுத்தியபோது, எரிச்சலடைந்த ஒரு இளம் பெண் லிஃப்ட்டில் இருந்து வெளியேறுகிறார். ஆனால், வீடியோ திடீரென முடிந்துவிட, அடுத்து என்ன நடந்தது என்ற கேள்வி பார்வையாளர்களை ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, சிரிப்பையும் விவாதங்களையும் மீம்களையும் தூண்டியுள்ளது. சிறுவனின் தைரியத்தை சிலர் பாராட்ட, மற்றவர்கள் இதுபோன்ற குறும்புகளின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கின்றனர்.
