சுதந்திர தினம் முன்னிட்டு “தேஷ் ரங்கீலா” பாடலுக்கு பள்ளி மாணவர்கள் நடன பயிற்சி செய்வது குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மாணவர்களுடன் சேர்ந்து, டான்ஸ் ஆசிரியரும் அதே ஆர்வத்துடன் நடனம் ஆடுகிறார். இந்த காட்சி பலருக்கு பள்ளி நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொடுத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sk Esrile (@esrilesk)

“>

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டுக்களை கொட்டிக் குவித்து வருகின்றனர். “இந்த ஆசிரியருக்கு சால்யூட்” என்று ஒருவரும், “என் சிறுவயதில் இருந்தே இந்தப் பாடலுக்கு எல்லா டீச்சர்களும் இதே ஸ்டெப்ஸ்தான் போடுவாங்க” என்று மற்றொருவரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “சிறந்த டான்ஸ் டீச்சர்” என்றும், “முதல் வரிசையில் இருக்கும் மாணவி ஒரு நல்ல நடன கலைஞராக வளரும்” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிலர் உணர்ச்சியோடு “இந்தப் பாடலை தேசிய கீதமாகவே அறிவிக்கணும்” என்று எழுதியுள்ளனர். மற்றொருவர் “சார், சிறுவயதிலிருந்தே இந்த நடன ஸ்டெப்ஸை மனதில் வைத்திருக்கிறார் போல” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்