தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெக் ஊழியர்களை தங்கள் நிறுவனங்களுக்கு இழுக்க முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைப்பதற்காக சாட் ஜிபிடி நிறுவனம் ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்திருப்பதால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.