தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தனியார் கார், ஜீப், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.3,000 கட்டணத்தில் புதிய பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸின் மூலம் ஓராண்டுக்கு 200 சுங்கச்சாவடிகளை கட்டணமின்றி கடக்கலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த திட்டம்  இன்று (ஆகஸ்ட் 15) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும் அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். அதன் பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை ‘ராஜ்மார்க்யாத்ரா’ செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட 2 மணி நேரத்திற்குள் பாஸ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி நிர்வாக சுங்கச்சாவடிகள் மற்றும் பார்க்கிங் கட்டணங்களில் இது பொருந்தாது. மேலும், வணிக வாகனங்களில் பயன்படுத்தினால் உடனடியாக பாஸ் ரத்து செய்யப்படும் எனவும் கட்கரி எச்சரித்துள்ளார்.