பெங்களூரு யெலஹங்கா நியூ டவுன் பகுதியில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்ணை போக்குவரத்து போலீசார் தடுத்து எச்சரித்ததால், அவர் ஆவேசம் அடைந்து போலீசாரிடம் கடும் வார்த்தைகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் முழுமையாக 1 நிமிடம் 17 வினாடிகள் கொண்ட வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.
வீடியோவில் அந்த பெண் தொடர்ந்து போலீசாரை திட்டிக்கொண்டு இருந்தார். “என் ஊழியர்களிடம் எதுவும் சொல்லாதே… அவரைத் தொட உனக்கு என்ன உரிமை” எனக் கூறி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதையடுத்து, அவர் பலமுறை கேவலமாக திட்டுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் பயன்படுத்திய இழிவான வார்த்தைகள் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்த, பொதுமக்கள் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ಈ ದಿನ ದಿನಾಂಕ 14.08.2025 ರಂದು ಯಲಹಂಕ ಉಪನಗರ ಪೊಲೀಸ್ ಠಾಣೆಯಲ್ಲಿ ಪ್ರಕರಣವನ್ನು ದಾಖಲಿಸಿ, ಆರೋಪಿತರನ್ನು ವಶಕ್ಕೆ ಪಡೆದು ಆರೋಪಿತರ ಮೇಲೆ ಕಾನೂನು ಬದ್ಧವಾಗಿ ತನಿಖೆಯನ್ನು ಕೈಗೊಂಡಿರುತ್ತದೆ. https://t.co/cxRXBhJTTf
— YALAHANKA NEW TOWN BCP (@yelahankantwnps) August 14, 2025
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, யெலஹங்கா நியூ டவுன் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்தனர். “ஆகஸ்ட் 14ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என போலீசார் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
