ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எனவே சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மது கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பந்தப்பட்ட மதுபானம் பார்களுக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.