சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரை குற்றவாளி என மீது மன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதன்படி குற்றவாளி கராத்தே மாஸ்டருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தன்னை வழங்கி சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சிபிசிஐடி போலீஸ் விசாரித்த இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.