சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது தனக்கு கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். நேற்று லதா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினார். கராத்தே மாஸ்டர் கெபிராஜை காவலில் எடுத்த விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கெபிராஜ் தான் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
