திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமணத்திற்கு நகை, பணம், ஆடம்பர கார் என்று வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இருப்பினும் சதீஸ்வர் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரீத்தி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.