திருப்பூரில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/hyxXVlbtCB
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 6, 2025
“>
இந்த கொடூரமான தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவரை இழந்தமைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் நீதியமைப்பு நிலைத்திருப்பதை உறுதி செய்ய அரசு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
