சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உயர்ந்து, இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.75,040 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ.9,380 ஆகவும் விற்பனையாகிறது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சவரனுக்கு ரூ.73,200 ஆக இருந்த தங்க விலை, சுமார் 5 நாட்களில் ரூ.1,840 உயர்ந்திருப்பது நகை வாங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் நகை விரும்பிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.